திமுக அரசுக்கு விசிக செக்; முதல்வர் ஸ்டாலின் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

திமுக அரசுக்கு விசிக செக்; முதல்வர் ஸ்டாலின் ஷாக்!

திமுக அரசுக்கு விசிக செக்; முதல்வர் ஸ்டாலின் ஷாக்!தமிழகத்தில் சாதி மறுப்பு, சமத்துவம், சகோதரத்துவம் என மேடைக்கு மேடை முழங்கி வரும் திமுக அரசுக்கு யாரும் எதிர்பாராத வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செக் வைத்துள்ளது. அதே சமயம் விசிக கட்சியின் இந்த திடீர் நடவடிக்கையை ஒட்டுமொத்த தலித் சமூகமும் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடக்கும் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் முதன் முதலாக அவர் உரையாற்றினார்.

பெண்களுக்கான கபடி போட்டி; கு பிச்சாண்டி துவக்கி வைப்பு!

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், தமிழக ஆளுநரின் உரைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள விசிக கட்சி வெளிநடப்பு செய்தது.

இதை பார்த்து ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் வாயடைத்து போனாலும் திருமாவளவன் வெளியிட்டு இருக்கும் விளக்கம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இருந்தாலும் கூட திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தமிழ்நாடு அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவது போன்ற செயலில் விசிக ஈடுபடுவதை முதல்வர் ஸ்டாலின் ரசிக்கவில்லை என்கிற பேச்சும் அடிபடுகிறது.

ஆனால் இதை ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்திருக்கும் பேட்டி திமுக கோட்டையை கதிகலங்க செய்யும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கூறியது என்னவென்றால்:

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு, பட்டியல் வகுப்பு மக்களுக்கு எதிரான வெறுப்பு என வெறுப்பின் அடிப்படையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாஜக மாநிலங்களின் உரிமையை அழிப்பதில் குறியாக இருக்கிறது.

ஆளுநர் என்ற அடையாளத்திற்கு பின்னால் இருந்து இயங்குகின்ற அரசியலை அம்பலப்படுத்த, கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் சட்டப்பேரவையை வெளிநடப்பு செய்தோம்.

இன்று, மாண்புமிகு முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். எதிர் வருகின்ற 8ம் தேதி அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து, நீட் தேர்வு விலக்கு கோரும். தமிழ்நாடு முதல்வர் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். தமிழக முதலமைச்சருக்கு பின்னால் நாங்கள் அணி திரண்டு நிற்போம்.

பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனம் என்பது, சில மாநிலங்களில் மாநில அரசின் உரிமையாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் அந்த உரிமையை தக்க வைத்து இருக்கும் சூழல் உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad