யுபிஎஸ்சி தேர்வு: கையை விரித்த நீதிமன்றம், கேள்வி எழுப்பும் எம்.பி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

யுபிஎஸ்சி தேர்வு: கையை விரித்த நீதிமன்றம், கேள்வி எழுப்பும் எம்.பி!

யுபிஎஸ்சி தேர்வு: கையை விரித்த நீதிமன்றம், கேள்வி எழுப்பும் எம்.பி!




யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது என டில்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மைத் தேர்வுகள் (இன்று) ஜனவரி 7, 8, 9, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளன.


பல மாநிலங்களில் கொரோனா சூழலை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்வர்கள் எந்தவித பிரச்னையும் இன்றி தேர்வு மையங்களுக்கு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் யுபிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா பரவலைக் காரணமாக வைத்து தேர்வை எழுதும் சிலர் தில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லும் தேர்வர்கள், நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தங்களது தேர்வுகூட அனுமதி சீட்டு, அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

யுபிஎஸ்சி தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஊரடங்கு காலத்திலும், முழு ஊரடங்கு நாளன்றும் யு.பி.எஸ்.சி (மெயின்) தேர்வுகள்.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தேர்வு மையம். எப்படி தேர்வர்கள் வருவார்கள்?

தமிழக மாணவர்களுக்கான அநீதியாக மாறாதா?

தொற்றுக்கு ஆளாக மாட்டார்களா?

தேர்வுகளை தள்ளி வைக்கவும்” என்று சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad