அண்ணியை ஆபாசமாக பேசிய அண்ணன் மகனை அடித்துக்கொன்ற சித்தப்பாக்கள்..!
அண்ணியை ஆபாசமாக பேசிய அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சித்தப்பாக்கள் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், ஜெயா தம்பதியின் மூத்த மகன் செல்லக்கண்ணு (37). இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். செல்லக்கண்ணு குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். கடந்த 23 வருடங்களுக்கு முன் இவரது தந்தை சண்முகம் இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களாக இவருக்கும் இவரது சித்தப்பா முருகேசன், சிவகுமார் உடன் சொத்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
ஒன்றரை லட்சம் பணத்தை சித்தப்பாவிடம் செல்லக்கண்ணு கொடுத்ததாகவும் அந்த பணத்தை அடிக்கடி குடிபோதையில் திருப்பி கேட்கும் போது அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு செல்லக்கண்ணு இவருடைய சித்தப்பாக்கள் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டியதால் பகை மேலும் முற்றி கொண்டது. செல்லக்கண்ணு குடித்துவிட்டால் தாய் என்று பார்காமல் கூட அடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, இவருடைய சித்தப்பாக்கள் இருவரும் செல்லக்கண்ணுவின் விரல்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
செல்லக்கண்ணு குடித்துவிட்டால் சொத்தை பிரித்து கொடு என்று தன்னுடைய சித்தப்பாவிடம் சண்டையிடுவதையும் வழக்கமாக வைத்து வந்துள்ளார். பிரச்சினை தொடர்ந்து இதே போல் நீடித்து கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு செல்லக்கண்ணு மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாக்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மனைவி மற்றும் அண்ணியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு மது அருந்தி இருக்கிறார்.
அப்போது முருகேசன், சிவகுமார் இருவரும் ஒன்று சேர்ந்து இனியும் இவனை விட்டு வைத்தால் நல்லது இல்லை என்று நினைத்து பெரிய இரும்பு ராடை கொண்டு செல்லக்கண்ணு இருந்த கதவை உடைத்து உள்ளே இருந்த செல்லக்கண்ணுவை மிகவும் கொடூரமான முறையில் தாக்கியதில் ரத்தவெள்ளத்தில் வீட்டிற்குள்ளே செல்லக்கண்ணு இறந்திருக்கிறார்.
பின்பு நீண்ட நேரமாக அதிக அளவில் சத்தம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகேசன், சிவகுமார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment