உடைந்து போன உதயநிதி ஸ்டாலின்; வெற்றி தேடி தந்த தொண்டர் மறைவு!
உதயநிதி ஸ்டாலின் உடைந்து நின்றதை பார்த்து, திமுக தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியான மறு நிமிடமே, சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் சேப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் மதன் மோகன் தீவிர பணிகளை முடுக்கி விட்டார்.
திமுக பகுதி செயலாளர் மதன் மோகனுக்கு பக்க பலமாக இருந்தவர் கே.முனுசாமி. இவர், திமுக பகுதி செயலாளர் மதன் மோகனின் மாமனார் ஆவார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முனுசாமி ஆற்றிய கட்சி பணி உதயநிதி ஸ்டாலினை நெகிழ வைக்கும் விதமாகவே இருந்தது.
முனுசாமியின் வீட்டில் தான் திமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் அலுவலகத்துக்கு வரும் திமுக தொண்டர்களிடமும், வாக்கு சேகரிக்கு சென்ற இடங்களில் பொதுமக்களிடமும் முனுசாமி நெருங்கி பழகி கட்சிக்காக அயராது பாடுபட்டார்.
இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக பகுதி செயலாளர் மதன் மோகனை எந்த அளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு தனது வெற்றிக்காக உழைத்த முனுசாமி மீதும் அன்பு கொண்டு இருந்தார்.
இந்நிலையில் சமீப காலமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த முனுசாமி திடீரென இன்று காலமானார். இந்த தகவலை அறிந்த உதயநிதி ஸ்டாலின் வெகுவாய் உடைந்து போனார்.
உடனே சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு திமுக தொண்டர்கள் புடை சூழ, விரைந்து வந்த உதயநிதி ஸ்டாலின் முனுசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உதயநிதி ஸ்டாலின் உடைந்து நின்றதை பார்த்து தொண்டர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.
No comments:
Post a Comment