சுத்து போட்ட உடன்பிறப்புகள்... சிக்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

சுத்து போட்ட உடன்பிறப்புகள்... சிக்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ!

சுத்து போட்ட உடன்பிறப்புகள்... சிக்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ!
திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை திமுகவினரே முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடூர் கிராமத்தில் இன்று காலை தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.கவை சேர்ந்த மயிலம் ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சேதுநாதன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறிச் சென்ற சேதுநாதனை அக்கட்சியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு எங்களுக்கு ஏன் தகவல் தருவதில்லை என கேள்வி எழுப்பினர்.

எதிர்க்கட்சியாக இருந்த போது உங்களுக்காக நாங்கள் இப்பகுதியில் அரசியல் செய்தோம். ஆனால் தற்பொழுது நாம் ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் உள்ளூர் நிகழ்ச்சிகளில் எங்களைப் புறக்கணித்து விட்டு தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இதுகுறித்து கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கட்சியினர் இல்லாமல் இப்பகுதியில் நீங்கள் எப்படி நிகழ்ச்சி செய்யமுடியும் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர். இதனால் செய்வதறியாது தவித்த சேதுநாதன் அங்கிருந்து வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.

அதேபோல் முன்னாள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணியின் புகைப்படமோ, பெயரோ அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டியில் இடம்பெறவில்லை. ஆனால் திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
No comments:

Post a Comment

Post Top Ad