மாஸ்க் போடுங்க பாஸ்... களத்தில் இறங்கிய கலெக்டர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

மாஸ்க் போடுங்க பாஸ்... களத்தில் இறங்கிய கலெக்டர்!

மாஸ்க் போடுங்க பாஸ்... களத்தில் இறங்கிய கலெக்டர்!


விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள் முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
தமிழகத்தில் கொரோனோ மற்றும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்து வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனோ பாதிப்பு மற்றும் ஓமைக்ரான் பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் மோகன் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் வாகன ஓட்டிகள் பேருந்துகளில் ஆய்வு செய்தார்.

அப்போது முகக்கவசம் அணியாதவர்களை கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்,மேலும் முகக்கவசனம் அணியவில்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். அதனை தொடர்ந்து எம் ஜி சாலையில் உள்ள வணிக வீதியிலுள்ள கடைகளில் முகக்கவசம் அணிகிறார்களா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad