பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸுடன் கைகோர்த்த பாஜக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 16, 2022

பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸுடன் கைகோர்த்த பாஜக!

பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸுடன் கைகோர்த்த பாஜக!



பஞ்சாப் மாநில தேர்தலை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது
மொத்தம் 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்றத்துக்கு வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என பஞ்சாப் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரம், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பு, கேப்டன் அமரீந்தர் சிங் புதுக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி போன்ற விஷயங்கள் பஞ்சாப் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில தேர்தலை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது. அதில், குரு ரவிதாஸின் பிறந்தநாள் பிப்ரவரி 16ஆம் தேதி வருகிறது. எனவே, பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரை பட்டியலின மக்கள் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு செல்வர். இதனால் அவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். வாக்களிப்பது அவர்களின் அரசியலமைப்பு உரிமை. அவர்களும் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்பதற்காக தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் 32 சதவீதம் தலித் மக்கள் இருக்கும் நிலையில், தேர்தலை தள்ளி வைக்க ஏற்கனவே அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் தலைவர் ஜஸ்விர் சிங் கர்ஹி ஆகியோர் ஏற்கனவே தேர்தலை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது பாஜகவும் இணைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad