ஐஸ்வர்யாவை பிரிந்த கையோடு மறுபடியும் அதையே செய்யும் தனுஷ்: இது நல்லதுக்கில்லயே - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 27, 2022

ஐஸ்வர்யாவை பிரிந்த கையோடு மறுபடியும் அதையே செய்யும் தனுஷ்: இது நல்லதுக்கில்லயே

ஐஸ்வர்யாவை பிரிந்த கையோடு மறுபடியும் அதையே செய்யும் தனுஷ்: இது நல்லதுக்கில்லயே



தனுஷ் தற்போது செய்து வரும் காரியத்தை பார்த்தவர்கள் இது நல்லதுக்கு இல்லையே என்கிறார்கள்.
தனுஷுக்கும், அவரின் காதல் மனைவியான ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். முன்னதாக சேர்ந்து வாழ்ந்தபோது எப்பொழுது எல்லாம் ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்பட்டதோ அப்பொழுது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

அப்படியாவது வீட்டு பிரச்சனையை மறந்து படங்களில் கவனம் செலுத்தலாம் என்று அப்படி செய்திருக்கிறார். இதை தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு நெருக்கமான நடிகர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகும் அதையே தான் செய்கிறார். அதாவது புதுப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.

ஏற்கனவே கை நிறைய படங்கள் வைத்திருக்கும் தனுஷ் தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று பெரும் பொருட்செலவில் எடுக்கப்படவிருக்கிறது.பிரச்சனையை எதிர்கொண்டு அதை தீர்க்க முயற்சி செய்யாமல் தனுஷ் தன் கவனத்தை படங்கள் பக்கம் திருப்புவது நல்லதுக்கு இல்லை என்கிறார்கள் நலம்விரும்பிகள்.

இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தாரும், நண்பர்களும் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யா அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் தான் நடந்ததையே நினைத்து வாத்தி செட்டில் கவலையாக இருக்கிறாராம்.

No comments:

Post a Comment

Post Top Ad