இனி இந்த மாநிலத்திலும் சன்டே ஃபுல் லாக்டவுன்!
கொரோனா பரவல் தீவிரத்தை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் உக்கிரம் பிற மாநிலங்களைவிட உச்சத்தில் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்கள் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் பொருத்து இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநில அரசும் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தற்போது இரவு நேர ஊடரங்கு மட்டும் ( இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை) அமலில் உள்ள நிலையில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இனி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நாளை இரவு 11 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து 30 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நகர்ப்புறங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று்ம் ராஜஸ்தான் அரசு தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ள ஊழியர்களை மட்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். ஊழியர்களின் தடுப்பூசி தகவல்களை பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டுமென்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment