மூடப்பட்டிருக்கும் பள்ளிகள்... மாணவர்களுக்காக அரசு போட்ட செம உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 21, 2022

மூடப்பட்டிருக்கும் பள்ளிகள்... மாணவர்களுக்காக அரசு போட்ட செம உத்தரவு!

மூடப்பட்டிருக்கும் பள்ளிகள்... மாணவர்களுக்காக அரசு போட்ட செம உத்தரவு!


கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமெடுத்துள்ள கொரோனா அலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. பொதுத் தேர்வு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பரவிவரும் கொரோனாவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றுடன் 5 முட்டைகளும் சேர்த்து உணவு வழங்க வேண்டும்.ஜனவரி மாத‌த்திற்கான மொத்த பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு அதற்குரிய சத்துணவு பொருட்களை விநியோகிக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு உலர் உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad