மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 10, 2022

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!


தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பால் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வருகிற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பால் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad