அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய அரசு அமைந்து கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தாலிபான் ஆட்சி முறைக்கு பயந்து இளம் அரசு ஊழியர்கள், இளைஞர்கள் பலர் வெளி நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது
இந்நிலையில், தாலிபான் ஆட்சியில் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகளுக்கு தொழில்முறை திறன்கள் இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசுப் பணிகளிலும் தொய்வு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தாலிபான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக தாலிபான் அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் நாட்டை பலவீனமாக்க, எங்கள் நாட்டில் இருந்த திறன் வாய்ந்த மற்றும் நன்கு படித்த நபர்களை, வேண்டுமென்றே சர்வதேச நாடுகள் மீட்கின்றோம் என்ற பெயரில் பறித்து விட்டனர். வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் மீண்டும் தாயகத்திற்கு திரும்பி மக்களுக்கு சேவை செய்யும்படி தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment