ரேஷன் கடைகளில் நாளை முதல்; தமிழக மக்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 15, 2022

ரேஷன் கடைகளில் நாளை முதல்; தமிழக மக்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்!

ரேஷன் கடைகளில் நாளை முதல்; தமிழக மக்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்!


பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்தது. இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கியது போல் ரொக்கத் தொகை அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் கொரோனா, பருவமழை என தொடர்ச்சியான பாதிப்புகளால் தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருவதால் பரிசுத் தொகுப்போடு நிறுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 13ஆம் தேதி வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டது.

17ஆம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் எஞ்சியுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் நாளைய தினம் ரேஷன் கடைகளுக்கு மட்டும் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளும் வகையில் திங்கட்கிழமை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.

எனவே நாளை (ஜனவரி 17) முதல் வரும் 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வாங்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினர். தற்போது வரை 88 சதவீதம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் எஞ்சியவர்களுக்கும் வழங்கப்பட்டு 100 சதவீதம் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு விடும் என்று கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி - 1 கிலோ, வெல்லம் - 1 கிலோ, முந்திரி - 50 கிராம், திராட்சை - 50 கிராம், ஏலக்காய் - 10 கிராம், பாசிப் பருப்பு - 500 கிராம், நெய் - 100 கிராம், மஞ்சள் தூள் - 100 கிராம், மிளகாய் தூள் - 100 கிராம், மல்லித் தூள் - 100 கிராம், கடுகு - 100 கிராம், சீரகம் - 100 கிராம், மிளகு - 50 கிராம், புளி - 200 கிராம், கடலை பருப்பு - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 500 கிராம், ரவை - 1 கிலோ, கோதுமை மாவு - 1 கிலோ, உப்பு - 500 கிராம், முழு கரும்பு - 1, துணிப்பை - 1 ஆகியவை அடங்கும்.

முன்னதாக பொங்கல் பரிசில் வழங்கப்பட்ட 21 பொருட்களில் சில பொருட்கள் விடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம்சாட்டினர். சில பொருட்கள் தரமற்றதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். உடனே சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad