அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 16, 2022

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு?

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு?


31 சதவீதம் அகவிலைப்படியினை கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அகவிலைப்படியை உயர்த்தியது. இதன் மூலம் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும், பொங்கல் போனஸ் தொகையும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படியினை கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தமிழக அரசு ஊழியர்கள் தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்படும் அகவிலைப்படிகள், நியாயவிலைக் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் அவ்வப்போது அரசு அனுமதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது 14 சதவீதம் பெறப்பட்டு 3 சதவீதம் அகவிலைப்படி வித்தியாச குறைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை, அரசு ஆணை எண் 323, நாள்: 17.10.2019 ஆம் ஆண்டின்படி நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நடைபெற்ற சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், மாண்புமிகு முதலமைச்சர், அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவித்து ஆணை எண் 3ல் பிறப்பிக்கப்பட்டுள்ள படி, தற்போது பெற்று வரும் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி, 1.1.2022 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.3

இதன்படி இந்த மாதத்திலிருந்து அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படியும், கூட்டுறவு சங்க நியாய விலை கடை பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு, 28 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இதனால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விடுபட்டுள்ள 3 சதவீதம் அகவிலைப்படி வித்தியாச குறைவினை நேர் செய்து அரசு ஊழியர்களை போல் கூட்டுறவு பணியாளர்களுக்கும் 31 சதவீதம் ஒரே மாதிரியாகவே அகவிலைப்படியினை வழங்க மாநில பதிவாளர் அனுமதி ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad