சிவகாசி பட்டாசு பிரச்சனை தீர்க்க வரும் மோடி?; செம தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

சிவகாசி பட்டாசு பிரச்சனை தீர்க்க வரும் மோடி?; செம தகவல்!

சிவகாசி பட்டாசு பிரச்சனை தீர்க்க வரும் மோடி?; செம தகவல்!பிரதமர் மோடி விருதுநகர் வருவது உறுதியாகி இருக்கிறது. இந்த வருகையின்போது பிரதமர் மோடி சிவகாசி பட்டாசு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
ராஜீவ் காந்திக்கு பிறகு 2வது பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். மோடியை நாங்கள் வரவேற்கிறோம். மாவட்டத்தில், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதமர் வருகை இருக்க வேண்டும்.

மேலும் சிவகாசி பட்டாசு பிரச்சினை குறித்தும் மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களை பிரதமர் மோடி பேச நேரம் ஒதுக்க வேண்டும். மேலும் காரைக்குடியில் நீரி அமைப்பின் கிளையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி வருகையையொட்டி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் மோடி அடிக்கல் நாட்டினார்.

எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து மத்திய அரசிடம் கேட்டால் ஜப்பானின் 90 சதவீத கடனால் நடைபெறுகிறது என பதில் வருகிறது. எனவே எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஜப்பான் பிரதமரிடம் தான் கேட்க வேண்டுமே தவிர பாரத பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டியதில்லை.

எம்ய்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு நம்முடைய பிரதமர் அவரின் பணியை முடித்துக்கொண்டார். மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிற்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வருகிறார். அவர் வரும்போது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். தமிழகத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது, இதுவே முதல்முறை ஆகும்.

தவறு செய்யவில்லை எனில் சட்டத்திற்கு முன் அவர் வந்து நிற்க வேண்டும். அவர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரை காப்பாற்ற பாஜக துணை நிற்கும் என்றால் அது தவறு. ஒரு நாள் அவருக்கு தண்டனை உண்டு.

அப்போது நகர தலைவர் வெயிலு முத்து, இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், விருதுநகர் பஞ்சாயத்து ராஜ் கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad