வருமான வரித் தாக்கல்.. கடைசி தேதி ஓவர்.. இனி என்ன செய்யலாம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

வருமான வரித் தாக்கல்.. கடைசி தேதி ஓவர்.. இனி என்ன செய்யலாம்?

வருமான வரித் தாக்கல்.. கடைசி தேதி ஓவர்.. இனி என்ன செய்யலாம்?


இனியும் வருமான வரித் தாக்கல் செய்ய முடியுமா?
வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஏற்கெனவே கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுதான் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்படாது என இந்திய அரசு தெளிவாக கூறிவிட்டது.
டிசம்பர் 31ஆம் தேதி வரை சுமார் 5.89 பேர் வருமான வரித் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. சரி, கடைசி தேதி முடிந்துவிட்டது. இனி கடைசி தேதி நீட்டிக்கப்படாது எனவும் அரசு கூறிவிட்டது. இனி வருமான வரித் தாக்கல் செய்ய முடியுமா?

கடைசி தேதிக்கு பிறகும் வருமான வரித் தாக்கல் செய்ய முடியும். சொல்லப்போனால் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்ய முடியும். ஆனால், அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி தேதிக்கு பின் வருமான வரித் தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் மொத்த வருமானம் கொண்டவர்கள் 1000 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்தினால் போதும்.


வருமான வரி விதிப்பு வரம்பிற்கு கீழ் உங்களது மொத்த வருமானம் இருந்தால் நீங்கள் எந்த அபராதமும் செலுத்த தேவையில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad