இந்த வருஷம் நயன்தாராவுக்கு 'டும் டும் டும்': ரகசியம் சொன்ன விக்னேஷ் சிவன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

இந்த வருஷம் நயன்தாராவுக்கு 'டும் டும் டும்': ரகசியம் சொன்ன விக்னேஷ் சிவன்!

இந்த வருஷம் நயன்தாராவுக்கு 'டும் டும் டும்': ரகசியம் சொன்ன விக்னேஷ் சிவன்!இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதம்பரியாக 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து சிலகாலம் அமைதி காத்த இருவரும் தாங்கள் காதலித்து வருவதை செல்ஃபி புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தினார்கள். அண்மையில் மோதிரம் அணிந்த கையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இதயத்தில் கை வைத்திப்பதை போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட விக்னேஷ் சிவன் 'விரலோடு உயிர் கூட கோர்த்து' என கேப்ஷனும் போட்டிருந்தார்.

.ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் தன்னுடைய அம்மா பிறந்தநாளை கொச்சியில் காதலர் விக்னேஷ் சிவனுடன் மிக பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா. அதனை தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளையும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதில் 'யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை' என்று குறிப்பிடபட்டுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் இந்த தேதியிலா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் நயன்தாரா, சமந்தா இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment

Post Top Ad