ஆரம்பிக்கலாமா?... செஸ் போட்டியில் குதித்த பெண்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

ஆரம்பிக்கலாமா?... செஸ் போட்டியில் குதித்த பெண்கள்!

ஆரம்பிக்கலாமா?... செஸ் போட்டியில் குதித்த பெண்கள்!


மகளிருக்கான மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சூடு பிடித்துள்ளது. இதில் 22 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் களம் இறங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக, ONGC சார்பில் 50 வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் இன்று துவங்கியது.


இதில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோயில் திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டிகள் இன்று துவங்கி 6 ம் தேதி வரை 9 சுற்றுகளாக நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரூபாய் 75 ஆயிரம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

போட்டிகளில் முதலிடம் பெறுகின்ற நான்கு பேர், தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்யப் பட்டு, தேசிய போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர். போட்டியின் துவக்க விழா திருவாரூர் ராசம்மாள் திருமண அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஆனந்தம் ஆன்மீகம் அமைப்பின் நிறுவனர் ஜே. கனகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சதுரங்க கழக இணைச்செயலாளர் ஆர்.கே பால குணசேகரன் வரவேற்றார்.

அரிமா செல்வகணபதி ஏ. கே.எம் டாக்டர் செந்தில், நகர செயலாளர் வாரை பிரகாஷ், மாவட்ட தலைவர்கள் விநாயக ரவிச்சந்திரன், மன்னார்குடி ஆடிட்டர் செந்தில்குமார், நியூ பாரத் பள்ளி முதல்வர் முரளிதரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

போட்டிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் துவக்கி வைத்தார். மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் குருசாமி, மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் என் சாந்தகுமார், இணை செயலர்கள்வெண்பா பிரபு, திருத்துறைப்பூண்டி பாலகுமார், திருவாரூர் சரவணன், கொரடாச்சேரி சரவணன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக திருவாரூர் வட்ட சதுரங்க கழக செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad