திருவாரூர் மாவட்டத்துக்கு எச்சரிக்கை; மிரட்டும் கனமழை!
திருவாரூர் மாவட்டத்துக்கு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மட்டுமின்றி நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது.
இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தைகள் ; பொதுமக்கள் பீதி!
விடிய, விடிய மழை பெய்த நிலையில் திருவாரூரில் காலை சற்று மழை நின்று வெயில் அடித்தது. அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவாரூர் தெற்குவீதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழையால் வேலைக்கு செல்பவர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். சாலையோர கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது.
மன்னார்குடியை சுற்றியுள்ள சவளக்காரன், நெம்மேலி உள்ளிக்கோட்டை, கருவாக்குறிச்சி, நீடாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வலங்கைமான் பகுதியில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் அரை மணி நேரம் நீடித்தது மழை. அதன் பிறகு நாள் முழுவதும் சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இந்த மழை குறித்து வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவிக்காததால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த மழைக்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது கடலுக்கு மேல் இல்லாமல் தரைக்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக அளவில் மழை மேகங்கள் கடலோர மாவட்டங்களில் காணப்படுகிறது.
இந்த மழை மேகங்கள் தான் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக பெய்யும் கனமழைக்கு முக்கிய காரணம் என்று சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
அதுமட்டுமல் இல்லாமல் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment