இது நடந்தா அது நடக்கும்..! முக்கிய அறிவிப்பை அறிவித்த RRR படக்குழு..!
RRR திரைப்படம் கொரோனா சூழல் பொறுத்து மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என தெரிகிறது
ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவான திரைப்படம் RRR. ராம் சரண், ஜூனியர் NTR , அஜய் தேவ்கன், அலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்கம் அதிகரிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.அதில் ஒன்றுதான் திரையரங்கில் 50 % இருகைக்கான அனுமதி. மேலும் பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்பட்டு மற்ற காட்சிகளுக்கு 50 % இருக்கையுடன் செயல்பட அரசு அனுமதியளித்தது. மிக பெரிய பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட RRR திரைப்படம் 50 % இருக்கையுடன் வெளியானால் கண்டிப்பாக வசூல் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தங்கள் வெளியீட்டை தள்ளிவைத்தனர்.
அதற்கு முன் RRR படத்திலிருந்து வெளியான ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்தது. அவ்வேளையில் படம் ஒத்துவைக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
அதாவது இந்தியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்தால், திரையரங்கிற்கு முழு அனுமதி அளித்தால் RRR திரைப்படம் மார்ச் அல்லது ஏப்ரலில் கண்டிப்பாக வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 வெளியாகும் என தேதியையும் குறிப்பிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனைக்கேட்ட ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இச்செய்தியை பகிர்ந்து வருகின்றனர். மேலும் பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படமும் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment