Tableau Trolls : "ஓடியாங்க ஓடியாங்க... குடியரசு தின அணிவகுப்பு வாகனம் வந்திருக்கு..." வச்சு செய்யும் மீம்ஸ்
குடியரசு தின விழா வாகன அணிவகுப்பு குறித்த சர்ச்சையால் மீம்கள் பல வைரலாக பரவி வருகின்றன. அதில் சில மீம்களை கீழே காணுங்கள்
கடந்த ஜன26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த வாகன ஊர்தி நிராகரிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் டில்லிக்காக தயார் செய்யப்பட்ட ஊர்திகள் தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த ஊர்திகள் தமிழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் டில்லியில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் டில்லியில் அனுமதிக்கப்பட்ட ஊர்திகளின் டிசைன்களும் தற்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன. பெரும்பாலும் இந்து மதத்தை பறைசாற்றும் விதமான ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். இந்நிலையில் மன்னாகுடி தொகுதி எம்எல்ஏவும் திட்டக்குழு உறுப்பினருமான டாக்டர் டிஆர்பி ராஜா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் பல தெருக்களில் சாய்பாபா புகைப்படங்களில் வியாழக்கிழமை தோறும் தெருக்களில் செல்லும் வாகனங்களின் புகைப்படத்தை போட்டு கவுண்டமணி செந்தில் நடத்தி "ஓடியாங்க ஒடியாங்க" காமெடியின் புகைப்படத்தை போட்டு "ஓடியாங்க ஓடியாங்க குடியரசு தின அணிவகுப்பில் சென்ற வாகனம் வந்திருக்கிறது ஓடியாங்க" என எழுதப்பட்ட மீம்மை பகிர்ந்துள்ளார்.
இந்த மீம்கள் தற்போது வைராலாக பரவி வருகிறது. இது மட்டுமல்லாமல் இது போன்று குடியரசு தின அணிவகுப்பு வாகனங்களை கிண்டல் செய்யும் மீம்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன. இந்த மீம்கள் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்
No comments:
Post a Comment