ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்:தனுஷ் vs ரஜினி
ரஜினியின் கோபத்தை போக்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைந்து வாழ வாய்ப்பு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவு இன்றும் பரபரப்பாக பேசப்படும் டாப்பிக்காக உள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 18 ஆண்டுகள் கழித்து திடீரென பிரிவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்வுகாணாமல் பிரிவதா சமூகத்தலங்களில் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
மேலும் இருவரையும் சமாதானப்படுத்தும் நோக்கில் இவர்களது குடும்பத்தார் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்களின் பிரிவு ரஜினிகாந்தை மிகவும் பாதித்துள்ளதாம். தனது மூத்த மகள் 18 ஆண்டுகாலம் தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு திடீரென பிரிந்தது அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனபது ரஜினியின் கருத்தும் கூட. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ரஜினி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கிறாராம். இவரின் நிலையை லதா ரஜினிகாந்த் தனது மகளான ஐஸ்வர்யாவிடம் எடுத்துகூறியிருக்கிறார்.
நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் தான் அப்பா பழைய நிலைக்கு திரும்புவார், மேலும் அவரின் கோபமும் தணியும் என்று லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்றுள்ள ஐஸ்வர்யா தனது கணவரான தனுஷிடம் பேசியிருக்கிறார்.
அதற்கு தனுஷ் உன்னைப்போல் என்னால் திடீரென மாறமுடியாது. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் தான் எடுத்த முடிவில் நிலையாக இருக்கும் தனுஷ் மனம் மாறி மீண்டும் இணைவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர் இருவருக்கும் நெருக்கமானவர்கள். இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் பட்சத்தில் ரஜினியின் கோபம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment