அந்த திமுக ஆள் மேல 10 கேஸ்... குண்டர் சட்டத்தில் கைதானவர்... இபிஎஸ் பகீர் தகவல்!
கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைதானவர் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் திமுக பிரமுகரை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து ஐனநாயக கடமையாற்றிய ஜெயகுமாருக்கு சிறைத் தண்டனை வழங்கியுள்ளனர். சர்வாதிகார அரசாங்கம் இது. முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை பழிவாங்கும் எண்ணத்தில் ஜெயகுமார் மீது வழக்கு பதிய வைத்துள்ளார். எதிர்கட்சியை நசுக்கும் இந்த முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம் .நானும் முதல்வராக இருந்தவன்; நான் முதல்வராக இருந்தபோது எப்படி நடந்துகொண்டேன் என திமுகவினர் நினைத்து பார்க்க வேண்டும். எதிர்கட்சியும், ஆளுங்கட்சியும் இரண்டும் சக்கரங்கள். எதிர்கட்சிகள் தவறை சுட்டிக்காட்டுவது ஜனநாயக மரபு.கள்ள ஓட்டு போட்டு , கொள்ளையடித்த பணத்தில் 5 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு பணம் , பரிசுப்பொருட்கள் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. திமுகவிற்கு தேர்தல் ஆணையம் கைப்பாவையாக இருந்துள்ளது. ஏவல்துறையாக தமிழக காவல்துறை செயல்பட்டுள்ளது.
No comments:
Post a Comment