குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 - இணையத்தில் வைரலாகும் விண்ணப்பம்!
குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை தொடர்பாக இணையத்தில் விண்ணப்பம் ஒன்று வைரலாகி வருகிறது
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் மகளிர் உரிமை தொகையான மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில், திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது போன்ற பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது. இதை அடுத்து தமிழக முதலமைச்சராக கடந்த மே மாதம் 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.
திமுக
ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆன நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் இதுவரை தொடங்கவில்லை. இதை அதிமுக - பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு பேசுவதையே மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளதாக அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது.
No comments:
Post a Comment