செம டென்ஷனில் எஸ்.பி.வேலுமணி - அடுத்தடுத்து விழும் சம்மட்டி அடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 14, 2022

செம டென்ஷனில் எஸ்.பி.வேலுமணி - அடுத்தடுத்து விழும் சம்மட்டி அடி!

செம டென்ஷனில் எஸ்.பி.வேலுமணி - அடுத்தடுத்து விழும் சம்மட்டி அடி!



முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.
அதிமுகவைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதே போல், வேலுமணியின் கூட்டாளிகள் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடைபெற்றது. கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அரசு ஒப்பந்தப் புள்ளி பணிகளை தருவதாகக் கூறி 1.25 கோடி ரூபாய் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலும் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக வேலுமணி மற்றும் அவரது மூத்த சகோதரர் அன்பரசன், நெருங்கிய கூட்டாளிகள் சந்திரசேகர் மற்றும் சந்திரபிரகாஷ் மற்றும் இவர்கள் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது, மோசடி, கூட்டு சதி உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய், கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாகவும் வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறை கோரிக்கையை ஏற்று 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad