ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
தமிழகத்தில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. ரயில்கள் புறப்படும் போதும் புறப்பட்ட பின்னரும், ரயில்வே போலிசார் கண்காணிப்பில் ஈடுப்படுவது வழக்கம்.
அது போல் ரயில்வே போலிசார் இன்று கண்காணிப்பில் ஈடுப்பட்ட போது, நடைமேடையில் உள்ள சிமெண்ட் கட்டையின் கீழ் மூன்று பைகள் இருப்பதை கண்ட அவர்கள் அதனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். இதில் அந்த பையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிளான 314 மதுபான பாட்டில்கள் இருந்தது.
இதனையடுத்து, மது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலிசார்,
யார் மது கடத்தலில் ஈடுபட முயன்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இதற்காக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க கடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசரணை நடைபெற்று வருகிறது. மேலும்,பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை ரயில்வே போலிசார் கலால் துறையில் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment