பள்ளிகளுக்கு பறந்த கடும் எச்சரிக்கை - கல்வித்துறை அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 14, 2022

பள்ளிகளுக்கு பறந்த கடும் எச்சரிக்கை - கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு பறந்த கடும் எச்சரிக்கை - கல்வித்துறை அதிரடி உத்தரவு!பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக, பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில், சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்தது தொடர்பாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், திருவண்ணமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசியில் உள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறிப்பட்டது.
இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுகள் தொடர்பாக தேர்வுத் துறை அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad