இனி 12 மணி நேரம் வேலை? அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி ஆக உயர்த்தும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
இந்த புதிய ஊதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரம், சம்பளம் உள்ளிட்டவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இதனிடையே, இந்த புதிய ஊதிய விதிகள் அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த புதிய ஊதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரம், சம்பளம் உள்ளிட்டவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இதனிடையே, இந்த புதிய ஊதிய விதிகள் அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், அதுபோன்ற திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment