150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா... OTT தளங்களின் சந்தாவும் இலவசம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 14, 2022

150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா... OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!

150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா... OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!



நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், அதற்கு நிறைய டேட்டாவும், 150Mbps வரை நல்ல வேகமும் தேவை. எனவே, இந்த அற்புதமான பிராட்பேண்ட் திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய உயர் தொழில்நுட்ப உலகில் வீட்டில் இருந்து வேலை செய்யவும், இணையம் வழியாக வகுப்புகளில் கற்கவும் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் அத்தகைய சிறந்த அதிவேகத் திறனுடைய பிராட்பேண்ட் திட்டங்களையே தேடுகின்றனர். இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் அதிவேக டேட்டாவை மட்டுமல்லாது, அதிக டேட்டா வரம்புகள், இன்னபிற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
தற்போது பெரும்பாலான டெலிகாம் ஆபரேட்டர்கள் 1 Gbps வேகத்தில் திட்டங்களை வழங்குகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு 150 Mbps வேகம் கொண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு தேவையான வேகம் இந்த திட்டங்களின் மூலம் பயனர்களுக்குக் கிடைக்கும். அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோவின் 150 Mbps, பிஎஸ்என்எல் வழங்கும் 150 Mbps, டாடா பிளே ஃபைபர் வழங்கும் 150 Mbps திட்டங்களைக் குறித்து அறிந்து கொள்வோம்.
Jio Fiber திட்டம் ரூ.999 என்ற விலையில் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இதில் நீங்கள் 150 Mbps இணைய வேகத்தைப் பெறுவீர்கள். இதில் மாதத்திற்கு 3300ஜிபி டேட்டா வரம்பு கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஈரோஸ் நவ் உள்ளிட்ட 15 OTT வீடியோ தளங்களின் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு திட்டத்தில் இரு பயன்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்குக் கிடைக்கும்.அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் (Bharat Fibre Broadband) என்ற பெயரில் அதிவேக இணைய சேவைகளை வழங்குகிறது. இதிலும் ரூ.999 என்ற விலையில் ஒரு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தைப் பெறும் பயனர்களுக்கு 150 Mbps வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 2000 ஜிபி டேட்டா வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வேகம் 10 Mbps ஆக குறைகிறது. ஜியோவைப் போலவே, BSNL நிறுவனத்தின் திட்டத்திலும், Disney Plus Hotstar, SonyLIV போன்ற சில OTT வீடியோ தளங்களின் அணுகல் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வரை தள்ளுபடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை முதல் மாதத்திற்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tata Sky Broadband ஆனது Tata Play Fiber என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 150 Mbps வேகத்தில் பிராட்பேண்ட் திட்டத்தை அனுபவிக்க ரூ.1050 பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் உங்களுக்கு 3300 ஜிபி டேட்டா வரம்பு வழங்கப்படும். இந்த வரம்பிற்குப் பிறகு, இணையத்தின் வேகம் 3 Mbps ஆக குறையூம். இந்த திட்டத்தின் பெரும் குறைபாடு என்னவென்றால், பிற நிறுவனத்தில் இதே வேகத்தில் வழங்கப்படும் திட்டங்களின் விலையைக் காட்டிலும் இது அதிகம். அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு OTT தளங்களின் அணுகலையும் டாடா ப்ளே ஃபைபர் பிராட்பேண்ட் 150 Mbps திட்டத்தில் பயனர்கள் அனுபவிக்க முடியாது.

No comments:

Post a Comment

Post Top Ad