‘நானும் மிஸ்டர் 360 தான்’…சூர்யகுமாருக்கு டஃப் கொடுத்த இளம் வீரர்: இந்தியா அபார பேட்டிங்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

‘நானும் மிஸ்டர் 360 தான்’…சூர்யகுமாருக்கு டஃப் கொடுத்த இளம் வீரர்: இந்தியா அபார பேட்டிங்!

‘நானும் மிஸ்டர் 360 தான்’…சூர்யகுமாருக்கு டஃப் கொடுத்த இளம் வீரர்: இந்தியா அபார பேட்டிங்!


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபாரமாக பேட்டிங் செய்தது.இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டி துவங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனராக ரோஹித் ஷர்மா களமிறங்கவில்லை. தொடரைக் கைப்பற்றிவிட்டதால், இளம் வீரர்கள் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார். இருவரும் சிறந்த துவக்கம் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் 4 (8) ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார்.

அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் 25 (16), இஷான் கிஷன் 34 (31) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 4ஆவது இடத்தில் களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும் 7 (15) பெரிய ஸ்கோர் அடிக்காததால், இந்தியா 160 ரன்களை தொடுவதே சிரமம் எனக் கணிக்கப்பட்டிருந்தது.தரமான பார்ட்னர்ஷிப்:

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல் 360 டிகிரில் பேட்டை சுழற்றி ரன்களை குவித்தார். இவருக்கு டஃப் கொடுத்தும் வகையில் வெங்கடேஷ் ஐயரும் மிட் விக்கெட், பைன் லெக், தேர்ட் மேன் திசைகளில் ரன்களை குவித்து, தானும் மிஸ்டர் 360 என்பதை வெளிக்காட்டினார். இருவரும் தொடர்ந்து அதிரடி காட்டயதால் 16, 17ஆகிய ஓவர்களில் தலா 17 ரன்கள் சென்றது. அடுத்து 18ஆவது ஓவரில் 10 ரன்களும், 19ஆவது ஓவரில் 21 ரன்களும் கசிந்தது. தொடர்ந்து கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்களை விளாசியதால், அந்த ஓவரிலும் 21 ரன்கள் வரை கிடைத்தது.

இறுதியில் சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 65 ரன்கள் அடித்த நிலையில், கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184/5 ரன்கள் குவித்து அசத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad