3GB டேட்டா Jio ரீசார்ஜ் திட்டம் - அளவில்லா திட்டங்களை அள்ளித்தரும் ஜியோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 17, 2022

3GB டேட்டா Jio ரீசார்ஜ் திட்டம் - அளவில்லா திட்டங்களை அள்ளித்தரும் ஜியோ!

3GB டேட்டா Jio ரீசார்ஜ் திட்டம் - அளவில்லா திட்டங்களை அள்ளித்தரும் ஜியோ!


ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தினசரி 3ஜிபி டேட்டா பலன்களுடன் வரும் நான்கு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்ததன் விளைவாக, ரீசாஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதுபுது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனம் திட்டங்களை வகுத்து வருகிறது.
அந்த வகையில், 3ஜிபி டேட்டா பலன்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4 ரீசார்ஜ் திட்டங்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற இணைய சேவை, ஜியோ சேவைகளின் இலவச அணுகல்கள் ஆகியன பயனர்களுக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு கால அளவைக் கொண்டுள்ளது. இதில் உங்களுக்கான திட்டம் எது என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.இந்த திட்டம் 28 நாள்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 3ஜிபி வரம்பற்ற டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. 3ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி (Jio Security), ஜியொ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகல் கிடைக்கும்.ஜியோவின் 28 நாள்களுக்கு செல்லுபடியாகும் ரூ.601 ரீசார்ஜ் திட்டத்தில், கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் எடிஷனின் (Disney+ Hotstar Mobile Subscription) ஒரு வருட சந்தா கிடைக்கிறது. வேறு நன்மைகளாக தினசரி 3 ஜிபி டேட்டா உடன் 6ஜிபி டேட்டா இலவசமாக இத்திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் ஆகிய சேவைகளின் அணுகலும் பயனர்களுக்குக் கிடைக்கிறது.ஜியோவின் 84 நாள்களுக்கு செல்லுபடியாகும் ரூ.1,199 ரீசார்ஜ் திட்டத்தில், தினசரி 3 ஜிபி டேட்டா பயனர்களுக்குக் கிடைக்கும். 3ஜிபி டேட்டா வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி , ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகலும் கிடைக்கிறது.இது ஒரு வருட ரீசார்ஜ் திட்டமாகும். இத்திட்டம் 365 நாள்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 3ஜிபி வரம்பற்ற டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. வரம்பை தாண்டி டேட்டா பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக இருக்கும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஜியோ சேவைகளின் அணுகலும் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இத்திட்டத்தில் கூடுதலாக ரூ.200 Jio Mart கூப்பனும் வழங்கப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad