சொந்த ஊரில் ஒண்ணு... வந்த ஊரில் ஒண்ணு... இரட்டை வாக்குரிமை: உள்ளாட்சித் தேர்தலில் 'சிட்டிசன்' களுக்கு செம டிமாண்ட்!
சென்னை போன்ற பெருநகரங்களில் பணிநிமித்தமாக வசிப்பவர்களுக்கு அவர்களின் சொந்த ஊரிலும் ஓட்டுரிமை உள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் வே்ட்பாளர்கள் மத்தியில் இந்த 'சிட்டிசன்'களுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது.பிரசாரம் எல்லாம் ஓய்ந்து தமிழகம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆர்வமுடன் தயாராகி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என பவர்ஃபுல்லான உள்ளாட்சி அமைப்புகளில் மாமன்ற உறுப்பினர்களாக (கவுன்சிலர்கள்) பொலிடிக்கல் என்ட்ரி கொடுக்க நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் மாவட்டந்தோறும் ஆயத்தமாகி வருகின்றனர்..உள்ளாட்சித் தேர்தல் என்றாலே லோக்கல் வெயிட் காட்டுவதற்கான சான்ஸ் என்பதால் ஆண்ட கட்சியான அதிமுகவும், அதன் கூட்டணியில் இருந்த பாமக, பாஜகவும் தனித்தனியாக களம் காண்கின்றன. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் தனியே வேட்பாளர்களை களமிறங்கி உள்ளன.
ஆளும் திமுக மட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து நிற்க, இளம் தலைமுறையினர், ஆண்ட, ஆளும் கட்சிகளில் சீட் கிடைக்காதவர்கள் என்று வார்டுக்கு குறைந்தது அரை டஜன் கணக்கில் போட்டியிடும் சுயேச்சைகள் என உள்ளாட்சித் தேர்தலால் தமிழக அரசியல் களம் கோடை தொடங்குவதற்கு முன் சூடு பிடித்துள்ளது.இந்த சூட்டோடு சூட்டாக வெற்றி கனியை பறிக்க அனைத்து கட்சிகளி்ன் வேட்பாளர்களும் வாக்காளர்களை கவர கடினப் பிரயத்தனம் செய்து வருகின்றனர். இவற்றில் ஒரு முயற்சியாக, பணிநிமித்தமாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசித்துவரும் பல்வேறு ஊர்காரர்களை, அவர்களின் சொந்த ஊரை சேர்ந்த வேட்பாளர்கள், வேட்பாளர்களின் உறவினர்கள், 'வாக்களிக்க ஊருக்கு வாங்க; உங்களோட ஆதரவை எங்களுக்கு தாங்க' என்று அலைபேசியில் அழைத்து அன்பு தொல்லை கொடுத்த வண்ணம் உள்ளனர்.
தங்களது அழைப்பை ஏற்று ஓட்டு போட சொந்த ஊருக்கு வர சம்பந்தம் தெரிவிக்கும் பெருநகரவாசிகளுக்கு பயண செலவுக்கான பயணத்தை ஜிபே செய்வது, வேன் ஏற்பாடு செய்வதென பல வேட்பாளர்கள் அவர்களை சிறப்பாக கவனித்து வருகின்றனர். எம்பி, எம்எல்ஏ எலக்ஷனைவிட உள்ளாட்சித்
தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் வெற்றிக்கு மிக முக்கியம் என்பதால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் சிட்டிசன்கள், உள்ளூர் வேட்பாளர்கள் மத்தியில் தனி முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். வார்டு கவுன்சிலர் தேர்தலில் நாங்கள்தான் டிசைடிங் ஃபேக்ட் என்று சொல்லும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இந்த சிட்டிசன்கள் லோக்கல் வெயிட் பெற்றுள்ளனர்.
இவர்களில் பலருக்கு பணிநிமித்தமாக வசிக்கும் பெருநகரங்களில் ஒரு ஓட்டும், சொந்த ஊரில் ஒரு ஓட்டும் என்று இரட்டை வாக்குரிமை உள்ளது லேறு கதை.
No comments:
Post a Comment