அதிமுக வேட்பாளர் பாலியல் தொல்லை; பகீர் கிளப்பிய பெண்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 17, 2022

அதிமுக வேட்பாளர் பாலியல் தொல்லை; பகீர் கிளப்பிய பெண்!

அதிமுக வேட்பாளர் பாலியல் தொல்லை; பகீர் கிளப்பிய பெண்!


அதிமுக வேட்பாளர் பாலியல் தொல்லை தந்ததாகவும், பாலியல் தொழிலுக்கு பெண்களை சப்ளை செய்ய வேண்டும் என்று மிரட்டியதாகவும் போலீசில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.
நெல்லை மகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (எ) ஆனந்தவள்ளி என்பவர் நெல்லை மாநகர காவல் ஆணையர் துரைக்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். புகாரில், ஆனந்தவள்ளி கூறி இருப்பதாவது:எனது கணவர் என்னை விட்டு பிரிந்த நிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அற்புதம் பெண்கள் அழகு நிலையம் மற்றும் அழகு பயிற்சி மையம் நடத்தி வந்தேன்.எனது கடை அருகில் நெல்லை அதிமுக வக்கீல் அணியை சேர்ந்த வக்கீல் ஜெனி என்பவர் கடந்த 2015ம் ஆண்டு திருமண தகவல் நிலையம் நடத்தி வந்தார். பக்கத்து கடைக்காரர் என்ற முறையில் அவர் என்னிடம் பழகினார்.அப்போது அதிமுக ஆட்சி என்பதால் எனக்கு அதிக அரசியல் செல்வாக்கு இருக்கிறது. ஏதாவது பிரச்சினை என்றால் உதவி கேள் என கூறினார். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
பின்பு அடிக்கடி எனது கடைக்கு வந்து என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரது பேச்சில் மயங்கி அவர் விரித்த வலையில் சிக்கிக்கொண்டேன். அவர் பெண்களை வசியம் செய்வதில் வல்லவர்.இந்த நிலையில் எனது கடை பராமரிப்புக்காக ஜெனியிடம் 50 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்கிடையில் எனது அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் பிற பெண்கள் மீதும் மோகம் கொண்டு அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை அணுகினார்.

அவரது விருப்பத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் எனது கடையை அவரிடம் ஒப்படைக்கும்படி மிரட்டினார். ஏற்கனவே மகரப் அலி மற்றும் தங்கராஜ் ஆகியோரிடம் நான் வாங்கிய கடன் பற்றி தெரிந்து கொண்டு அவர்களையும் எனக்கு எதிராக செயல்பட வைத்தார்.அழகு நிலையத்தை தன்னிடம் கொடுத்து விடும்படியும் அதில் வேலை பார்க்கும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து அதிக லாபம் அடைய போவதாகவும் தெரிவித்தார்.
அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால் ஜெனி, மகரப் அலி மற்றும் தங்கராஜ் ஆகியோர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். மேலும் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எனது கடை பொருள்களை ஜெனி அபகரித்துக் கொண்டார்.

ஆனந்தவள்ளி தனது புகாரில் குறிப்பிட்டுள்ள அதிமுக வழக்கறிஞர் ஜெனி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சியின் 6வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்குப்பதிவு நடக்க உள்ள சூழலில் நெல்லை அதிமுக வேட்பாளர் மீது பெண் ஒருவர், பாலியல் புகார் அளித்து உள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad