வேலூர் அதிமுக வேட்பாளரை காணவில்லை… அமைச்சர் மீது பரபரப்பு புகார் அளித்த அதிமுகவினர்!
வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் 11 ஆவது வார்டு அதிமுக வேட்பாளரை காணவில்லை என அதிமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
வேலூர்மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் அதிமுக சார்பில் 58 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 11 ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுகேந்திரன் என்பவரை, கடந்த சில நாட்களாக அதிமுகவினர் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில், அவரை காணவில்லை என அதிமுகவினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் 57 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேட்பாளர் சுகேந்திரன் காணவில்லை என புகார் அளித்தனர்.மேலும்,இதற்கு காரணம் அமைச்சர் துரை முருகன் தான் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக வேட்பாளரை, அமைச்சர் மிரட்டினார் என கூறப்படுகிறது.
ஆகையால் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை புகார் அளித்தார்.
அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து மிரடப்படுவதாகவும், காவல்துறையும் அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment