தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டதா? -அமைச்சர் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 21, 2022

தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டதா? -அமைச்சர் விளக்கம்!

தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டதா? -அமைச்சர் விளக்கம்!



தேர்தல் நேரம் என்பதால் கொரோனா தினசரி பாதிப்புகளை அரசு குறைத்து காட்டியதாக பரவலாக எழுந்துள்ள பேச்சுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் நம்ம கஃபே திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மோகன், பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்..
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியது:

சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கைகள் மூலமாக நம்ம கஃபே என்னும் பிரபலமான உணவகம் திறக்கப்பட்டது எனவும், பல்வேறு வியாபார உத்திகள் மூலம் 20 வது கிளை சிறப்பாக துவங்கப்பட்டது என்றும், திமுக ஆட்சியில் கலைஞர் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரையில் திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதன் மூலமும், முதல்வர் ஸ்டாலின் எடுத்துவரும் தீவிர நடவடிக்கையின் பயனாகவும் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைத்து வந்துள்ளதாக அமைச்சர் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்து தற்போது 15 ஆயிரம் அளவில் குறைந்து வருகிறது என கூறினார்.முதல் தவணை தடுப்பூசி சதவீதம் 92 சதவீதத்தை நெருங்கியிருக்கிறது.‌ இரண்டாம் தவணை தடுப்பூசி 72 சதவீதமாக உள்ளது. அகில இந்திய அளவில் 175 கோடி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 10 கோடியை நெருங்க போகிறோம் என்றும், தற்போது 9.88 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 1 கோடி அளவில் இருக்கின்றனர். அவர்கள் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், விரைவில் குஜராத்தை போன்று தமிழ்நாட்டிலும் 10 கோடி என்ற அளவில் தடுப்பூசி இலக்கை எட்டுவோம் என்று கூறினார்.

தமிழகம் முழுவதும் 87 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. எனவே பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது எளிதானது. வரும் 23 ஆம் தேதி சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவிருக்கிறது எனவும், இந்தியாவிலேயே 24 மணி நேரமும் தடுப்பூசி போடுவது தமிழ்நாட்டில் தான் எனவும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் என அனைத்திலும் தினந்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.தேர்தல் நேரம் என்பதால் யாரும் கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்டவில்லை. பாதிப்புகள் அவ்வப்போது எவ்வளவு இருக்கிறதோ அதை அதிகரித்தோ குறைத்தோ காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி வாங்குவது குறித்து பேசிய அமைச்சர், மாநில அரசு சார்பில் தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினார் என்றும், தடுப்பூசி விகிதத்தில் 90 சதவீதம் அரசு மருத்துவமனைகளுக்கும் , 10 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகளும் பெற்று கொள்ளலாம் எனவும் அமைச்சர் மா.சு. கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad