முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்...சாட்டையை சுழற்றும் டிஜிபி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 10, 2022

முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்...சாட்டையை சுழற்றும் டிஜிபி!

முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்...சாட்டையை சுழற்றும் டிஜிபி!


சட்டம் -ஒழுங்கு விஷயத்தில் தமிழக காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதை அடுத்து கட்சி சார்பு ரவுடிகளை பாரபட்சமின்றி கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இப்படிக்கு கட்சி தலைமைக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் லோக்கல் அரசியல் புள்ளிகளின் கொட்டத்தை அடக்க வேண்டிய பொறுப்பு காவல் துறையினருக்கு உண்டு. ஆனால், ஆளுங்கட்சி, கூட்டணி கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் என்றாலே, நமக்கேன் வம்பு என்று காக்கி சட்டைகள் எண்ணி, அவர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ளும்படியாகதான் யதார்த்த நிலை உள்ளது.

போலீசாரின் இந்த நிலையை மாற்றி, அவர்களுக்கு பூஸ்ட் தரும்படியான நம்பிக்கை வார்த்தைகளை காவல் துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளி்த்துள்ளாராம்.

மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு நிலவரம் குறித்து அவர், காவல் துறை உயரதிகாரிகளுடன் சில தினங்களுக்கு ஆலோசனை நடத்தினார். அப்போது, 'திமுக கூட்டணியிலுள்ள சில கட்சிகள் போலீசாருடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும், இதுதொடர்பாக இதனை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களிடம் சொல்லி கண்டிக்க வேண்டும்' என்று காவல் துறையினர் தரப்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

அதற்கு, 'நான் சொல்வது இருக்கட்டும்... யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்க' என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டதாம். முதல்வர் கொடுத்த இந்த க்ரீன் சிக்னலை அடுத்துதான், தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள, அரசியல் சார்பு ரவுடிகள் அனைவரையும் பாரபட்சமின்றி உடனே கைது செய்ய டிஎஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad