செம்ம மாஸ் தலைவரே... ரஜினிகாந்தின் அடுத்தப்பட அறிவிப்பால் ஆறுதலான ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 10, 2022

செம்ம மாஸ் தலைவரே... ரஜினிகாந்தின் அடுத்தப்பட அறிவிப்பால் ஆறுதலான ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்!

செம்ம மாஸ் தலைவரே... ரஜினிகாந்தின் அடுத்தப்பட அறிவிப்பால் ஆறுதலான ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்!


நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தின் அறிவிப்பை தொடர்ந்து அவரது ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளி வந்தப் படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

நெல்சனுக்கு வாய்ப்பு

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட புரடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நெல்சன்.

அனிருத் இசை

தலைவர் 169 படத்தை நெல்சன் தான் இயக்கப்போகிறார் என ஏற்கனவே அரசல்புரசலாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தலைவர் 169 ப்ரமோ

இதன் அறிவிப்பு வீடியாவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ப்ரமோ வீடியோவில் கெத்தாய் கால் மேல் கால் போட்டு போஸ் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸ் தலைவரே என கொண்டாடி வருகின்றனர்.

தெறிக்கும் டிவிட்டர்

கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் பெரும் வேதனையில் இருப்பதாக தகவல் வெளியானது. ரஜினியின் ரசிகர்களும் பெரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் தலைவர் 169 அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து #Thalaivar169 #Rajinikanth ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து டிவிட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.



No comments:

Post a Comment

Post Top Ad