அண்ணாமலைக்கு டிரான்ஸ்ஃபர் கொடுக்கும் டெல்லி? கிழியப் போகும் தலைவர் சீட்?
அண்ணாமலை மீது பாஜகவினரே கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அடுக்கடுக்காக பல புகார்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தினர்.
Free Games : சின்ன சின்ன விளையட்டு- ஆன்லைனில் லைவாக விளையாடுங்கள்!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை பாஜக தலைவராக நியமித்தால் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் கவனம் திரும்பும். புது இரத்தம் பாய்ச்சுவார் என்று டெல்லி தலைமை கணக்கு போட்டது. ஆனால் பாஜகவின் ஆதரவாளர்களையே இழக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதாக சொல்கிறார்கள்.
எல்.முருகன் தலைவராக இருந்தபோதுகூட கந்தசஷ்டி கவசம் விவகாரம், வேல் யாத்திரை போன்ற சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு அவ்வப்போது செய்திகளில் அடிபட்டார். ஆனால் அண்ணாமலையோ விஷயங்களை சரியாக முன்னெடுக்காமல் மீம்ஸ்களில் அடிபட்டு வருகிறார்.
டிஜிபிக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு: உடனே ஆக்ஷன் எடுங்க!
அது தவிர கட்சியின் சீனியர்கள் பலரும் அண்ணாமலை மேல் அதிருப்தியில் இருக்கிறார்களாம். அதாவது அண்ணாமலை தான் சார்ந்த கவுண்டர் சமூகத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் பிற சமூகத்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.தேர்தலுக்கு முன்பாக திமுக தலைமைக் கழகத்தில் பொறுப்பில் இருந்த கு.க.செல்வம் பாஜகவுக்கு எல்.முருகன் மூலம் கொண்டு வரப்பட்டார். அவர் தற்போது விட்டால் போதும்
என திமுக பக்கமே தஞ்சமடைந்து விட்டார். முருகன் இருந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இப்போதுள்ள தலைமை நிறைவேற்றவில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம்.
இவர் மட்டுமல்லாமல் வி.பி.துரைசாமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்களும் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை குறித்து நீண்ட புகார் ஒன்று டெல்லிக்கு சென்றுள்ளது.அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அண்ணாமலையை கர்நாடகாவுக்கு செல்ல டெல்லி தலைமை வலியுறுத்தும் என்கிறார்கள். அப்படியெனில் தமிழக பாஜக தலைமை பதவி யாருக்கு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுப்பினோம். அதற்கு முன்னாள் அமைச்சர் பொன்னாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதே இப்போதுள்ள தகவல்.
No comments:
Post a Comment