பிரிட்டனை புரட்டிப் போட்ட யூனிஸ் புயல்... எவ்வளவு வேகம்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 18, 2022

பிரிட்டனை புரட்டிப் போட்ட யூனிஸ் புயல்... எவ்வளவு வேகம்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

பிரிட்டனை புரட்டிப் போட்ட யூனிஸ் புயல்... எவ்வளவு வேகம்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!


யூனிஸ் புயலை தாக்கியதையடுத்து பிரிட்டன் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வரும் பிரிட்டனை இயற்கை சீற்றம் தற்போது ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டுள்ளது. யூனிஸ் புயல்தான் தற்போது பிரிட்டனில் துயரமாக கருதப்படுகிறது.கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான புயலாக யூனிஸ் உள்ளதாக வானிலை ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் வைட் தீவை மணிக்கு 122 மைல் வேகத்தில் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, பிரிட்டனில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரயில், விமானம் மற்றும் படகு போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளன.மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. வானிலை மிகவும் மோசமாக உள்ள நிலையிில், பிரிட்டனுக்கு கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பிரிட்டனை தொடர்ந்து யூனிஸ் புயல் வடக்கு ஜெர்மனிய தாக்கக்கூடும் என்பதால், ஜெர்மனியின் வடக்கு கடலோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad