என்னது விடுமுறை கிடையாதா? ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 18, 2022

என்னது விடுமுறை கிடையாதா? ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

என்னது விடுமுறை கிடையாதா? ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி விடப்பட்டுள்ள விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே வாக்களிக்க ஏதுவாக சிறப்பு விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும்.

ஆனால் தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை சில நிறுவனங்கள் முரண்டு பிடிக்கும். தேர்தல் நாளிலும் அலுவலகத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தும். இதுபோன்ற சமயங்களில் ஊழியர்கள் புகார் அளிக்கலாம் என்று தொழிலாளர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135ன் படி, தேர்தல் நடைபெறும் நாளன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்காவிடில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார் தெரிவிக்க,* கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் - 94453 98752

* தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) செந்தில்குமரன் - 94422 69947

* கோவை மாநகர் அப்துல் கபூர் - 98430 29910

* முருகானந்தம் - 80563 88846

* ராணி லட்சுமிபாய் - 94893 61802

* பெரியநாயக்கன்பாளையம், ஆர்.எஸ்.புரம் தீபா பாரதி - 99947 89312

* மேட்டுப்பாளையம் செல்லப்பா - 99424 37022

* பொள்ளாசி வாசுதேவன் - 96264 40609

* வால்பாறை சதீஷ் கண்ணன் - 99521 42578

ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad