PAN அட்டையை Aadhaar உடன் இணைத்துவிட்டீர்களா - இல்லைன்னா பிரச்னை தான்!
பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 உடன் முடிவடைகிறது. உடனடியாக இதை நீங்கள் செய்யத் தவறினால், பான் கார்டு முடக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், பான் அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் பான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கு தேவையான அனைத்து வழிமுறைகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Aadhaar எண்ணை PAN கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்கத் தவறினால் அபராதம் விதிக்கவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால், பயனாளிகளின் பான் அட்டை முடக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்க தவறும் பயனர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்திற்கொண்டு அரசு இந்த கால நீட்டிப்பை வழங்கியது ஆதார் - பான் இணைப்புக்கு அரசு கால நீட்டிப்பு வழங்குவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவே கடைசியாக வழங்கப்பட்ட காலக்கெடு எனவும் அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment