IND vs WI 2nd T20: ‘கடைசி பந்துவரை ட்விஸ்ட்’…பயம் காட்டிய பூரன், பௌல்: இந்தியா த்ரில் வெற்றி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 18, 2022

IND vs WI 2nd T20: ‘கடைசி பந்துவரை ட்விஸ்ட்’…பயம் காட்டிய பூரன், பௌல்: இந்தியா த்ரில் வெற்றி!

IND vs WI 2nd T20: ‘கடைசி பந்துவரை ட்விஸ்ட்’…பயம் காட்டிய பூரன், பௌல்: இந்தியா த்ரில் வெற்றி!



மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது.இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் துவங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி துவங்கியது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஆகியோர் ஓபனர்களாக களமிறங்கினர். பந்துகள் முதல் சில ஓவர்களில் சிறப்பாக ஸ்விங், டேர்ன் ஆனதால், இதனை சமாளிக்க முடியாமல் இஷான் கிஷன் 2 (10) ரன்கள் மட்டும் அடித்து நடையைக் கட்டினார். தொடர்ந்து ரோஹித் ஷர்மா 19 (18), சூர்யகுமார் யாதவ் 8 (6) ஆகியோர் ஆட்டமிழந்ததால், இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமானது.இந்நிலையில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இவரும் ரன் மழை பொழிய துவங்கியதால், மேற்கிந்தியத் தீவுகள் அணி பௌலர்களுக்கு நெருக்கடி ஏற்பட்ட துவங்கியது. அந்த சமயத்தில் விராட் கோலி 53 (41) ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்துடன், வெங்கடேஷ் ஐயர் பார்ட்னர்ஷிப் அமைத்தால், மீண்டும் ரன் வேகத்தில் விறுவிறுப்பு தென்பட்டது.

5 பௌலர்களும் தொடர்ந்து ரன்களை விட்டுக்கொடுத்து வந்ததால், 15ஆவது ஓவரை வீச கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் வந்தார். சரி இவராவது ரன்களை கட்டுப்படுத்து, அந்த அணி பௌலர்களுக்கு முன் உதாரணமாக இருப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 14 ரன்களை கசியவிட்டு, சொதப்பினார். இந்த ஓவரில் ரிஷப் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார்.தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி ஓவரின்போது வெங்கடேஷ் ஐயர் 33 (18) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி ரிஷப் பந்த் 52 (28) ரன்களை அடித்ததால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 186/5 ரன்களை குவித்தது.

மே.இ.தீவுகள் இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஔபனர்கள் பிரண்டென் கிங் 22 (30), கைல் மேய்ர்ஸ் 9 (10) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன், ரௌமேன் பௌல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

இந்த பார்டனர்ஷிப் 50, 100 என ரன்களை குவித்தது. இறுதியில் 100 ரன்கள் எடுத்த நிலையில், நிகோலஸ் பூரன் 62 (41) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து 6 பந்துகளில் 25 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் சென்ற நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் பௌல் சிக்ஸர் அடித்து அசத்தினார்.இதனால், கடைசி இரண்டு பந்துகளில் 11 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது சாமர்த்தியமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் இரண்டு சிங்கில்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 178/3 ரன்கள் மட்டும் எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad