சீமானை கழுவி ஊற்றிவரும் உடன்பிறப்புகள்... எதற்காக தெரியுமா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுகவினர் கழுவி ஊற்றிவருகி்ன்றனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை நிறைவடைந்தவுடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்று அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவை எதிர்த்து திமுக போட்டியிடவில்லை அது ஏன் என்று தெரியவில்லை? நாம் தமிழருக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூறும் திமுகவினர், தனித்து நிற்கும் பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை?நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 60 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று பாஜகவில் ஒரு வேட்பாளரையாவது கடத்தி பாருங்களேன்.... அப்படி செய்தால் உஙகளை (திமுகவினரை) திகார் சிறையில் அடைத்துவிடுவார்கள்.அம்மையார் துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக செல்வதை விட்டுவிட்டு மோடியின் படத்தை வைத்து கும்பிடலாம். அவர் இல்லை என்றால் ஸ்டாலின் முதல்வராக வந்திருக்கவே முடியாது. மோடி இல்லை என்றால் உங்களுக்கு அரசியலே இல்லை"
என்று ஆவேசமாக கூறினார்.
சீமானின் இ்ந்த பேச்ச சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் சீமானின் இந்த பேச்சுக்கு திமுகலினர் ஆற்றிவரும் எதிர்வினையும் தற்போது வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான வீடியோவில், " முதல்வர் ஸ்டாலினின் மனைவி அரசியல் தொடர்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், பொதுவெளியில் அவரை பற்றி பேச வேண்டிய அவசியம் தற்போது என்ன வந்தது" என்று சீமானை நோக்கி திமுகவினர் பகிரங்கமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment