பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டவரை மிரட்டிய அமைச்சர் கீதா ஜீவன்… மு.க.ஸ்டாலின் அப்செட்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிப்பின் போது கேள்வி கேட்ட நபரை அமைச்சர் கீதா ஜீவன் மிரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: "திமுக ஆட்சி மகளிருக்கான ஆட்சி, மகளிருக்கு முதலிடம் தரும் ஆட்சி, ஆகையால் தான் ஆட்சிக்கு வந்தவுடன் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு அரசு பணியில் 40 சதவீத இடதுக்கீடு அறிவித்து அதனை செயல்படுத்தி கொண்டு இருக்கும் அரசு என்றும், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, இலவசமாக செல்போன் வழங்குவோம் என்றார்கள் வழங்கவில்லை, இலவச வைஃபை வழங்கப்படும் என்றார்கள் வழங்கவில்லை, முதியோர்களுக்கு அரசு பஸ்சில் இலவசம் என்றார்கள் அதுவும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பால்விலையை குறைத்துள்ளோம், பெட்ரோல் விலையை நாங்கள் ஏற்றவில்லை என்றாலும் குறைத்துள்ளோம். சமையல் கேஸ் விலையை ஏற்றுவது மத்தியரசு தான், அதனை குறைக்க முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம், சமையல் கேஸ் விலையை குறைக்க வேண்டியது பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் தான் என்றும், பின்னடி வாக்கு கேட்க வரும் பா.ஜ.கவிடம் நீங்களும் கோரிக்கையை கேளுங்கள், சிலிண்டர் விலை அதிகம் என்பதனை ஒத்துக்கொள்கிறேன், வாங்க முடியவில்லை, நிச்சயமாக குறைக்க வேண்டும் விரைவில் சிலிண்டர் விலையை குறைக்க கூடிய இடத்திற்கு திமுக வருவோம், இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரும் அந்த இடத்திற்கு நாம்
வருவோம். அதை நிச்சயமாக செய்து தரும்" என்றார்.
கனிமொழி எம்.பி.பேசிக்கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த ஆனந்தமாரியப்பன் என்பவர் கோவில்பட்டி பகுதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனிமொழி எம்.பியிடம் இருந்த மைக்கினை வாங்கிய அமைச்சர் கீதாஜீவன் நாங்க ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகிறது. என்ன பேசுறீங்க என மிரட்டல் தொனியில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment