திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன தேவஸ்தானம்!
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கான இலவச தரிசன டிக்கெட் விநியோகம் குறித்தும், சுப்ரபாத சேவை உள்ளிட்டவற்றுக்கு பக்தர்களை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாகவும் தேவஸ்தான நிர்வாகம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் முக்கியமாக கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
பிப்ரவரி மாதத்துக்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகளஅ வீதம், 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோன்று ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மொத்தம் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் தரப்பட்டன.
கட்டண தரிசன டிக்கெட்டை போன்று, இலவச தரிசனத்துக்கு பிப்ரவரி மாதம் முழுவதும் ஆன்-லைன் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிலையில், 15 ஆம் தேதி வரை மட்டுமே இந்த டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பிப்ரவரி 16 ஆம் தேதி முதல், பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் இல்லாமவ், வழக்கம்போல் நேரடியாக வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 9 மணி அளவில், இலவச தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வரும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment