பாஜக தூக்கிய புதிய ஆயுதம்; அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!
தேர்தலுக்கு 2 நாள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக எடுத்திருக்கும் பேராயுதத்தை பார்த்து தமிழக அரசியல் கட்சிகள் அரண்டுபோய் கிடக்கின்றன.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இவற்றில் 10 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.
பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கருமத்தம்பட்டி தேர்தலை சந்திக்கிறது. எனவே நகராட்சியை கைப்பற்ற திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நகராட்சி 8வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பெரியசாமி என்பவர் கிறிஸ்துவ சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஜெபமாலையுடன் கூடிய சிலுவை மற்றும் 2 மெழுகுவர்த்திகளை பிளாஸ்டிக் தட்டில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுத்து நூதன் முறையில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.
திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தங்களுக்கே உரிய ஸ்டைலில் மதத்தை கையில் எடுத்து வாக்கு வேட்டையாடி
வருகிறது.
அதிலும் குறிப்பாக, கிறிஸ்துவ கைக்கூலிகள் என ஏகத்துக்கும் எச்.ராஜா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் அர்ச்சித்து வந்த அதே கிறிஸ்தவ மத அடையாளத்தை பரிசு பொருட்களாக கொடுத்து வாக்குகளை சேகரித்து வருவது வாக்களர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment