ஆளுநர் செய்வது அரசியல் அல்ல... அதுக்கு பேரு என்ன தெரியுமா? நாஞ்சில் சம்பத் பொளேர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 11, 2022

ஆளுநர் செய்வது அரசியல் அல்ல... அதுக்கு பேரு என்ன தெரியுமா? நாஞ்சில் சம்பத் பொளேர்!

ஆளுநர் செய்வது அரசியல் அல்ல... அதுக்கு பேரு என்ன தெரியுமா? நாஞ்சில் சம்பத் பொளேர்!


நீர் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதால் ஆளுநரை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் கட்சிகள், சுயேச்சைகள் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது பேசிய அவர், “இது உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல். ஒரு ஐந்தாண்டு காலம் மாநகராட்சி பிரதிநிதிகள் இல்லாமலேயே தமிழ்நாடு தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறது. இந்திய அரசியலில் எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அநியாயம், வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் வகையில் தேர்தலையே ரத்து செய்தார்கள். எதிரிகள் வலுவுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்வார்களே தவிர அவர்கள் வலுவுள்ளவர்கள் அல்ல. மக்கள் அவர்களின் பக்கம் நிற்கவில்லை.
இன்று நாடு முழுவதும் ஒரு கலவர சூழலையும், ஒரு கலக சூழலையும் உருவாக்கி இந்த நாட்டையே காவிமயமாக்க துடிக்க கூடிய கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்கின்ற வரலாற்று கடமையில் திமுக இன்று தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று சொல்லமாட்டேன், ஒரு அயோக்கியதனத்தை ஆளுநரே செய்கிறார் என்பதை வெளிப்படையாகவே இன்று பதிவு செய்கிறேன். ஒரு ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திருப்பி அனுப்ப எந்த அதிகாரமும் இல்லை, ஒரு கன்கரன்ட் லிஸ்டில் இருக்கின்ற கல்வி சார்ந்த, நீட் சார்ந்த பிரச்னையில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை திருப்பி அனுப்புவதற்கு இவருக்கு அதிகாரம் இல்லை,

No comments:

Post a Comment

Post Top Ad