படுஜோராய் தயாராகி வரும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்; மேயர் சீட்டை அலங்கரிப்பது யார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 23, 2022

படுஜோராய் தயாராகி வரும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்; மேயர் சீட்டை அலங்கரிப்பது யார்?

படுஜோராய் தயாராகி வரும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்; மேயர் சீட்டை அலங்கரிப்பது யார்?மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,2011 முதல் 2016 வரை மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்று வந்தது.இந்நிலையில் 2016 க்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், மாமன்ற கூட்ட அரங்கு மற்றும் மேயர் அலுவலகம் செயல்படாமல் இருந்தது.இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்த 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், வருகின்ற 2 ஆம் தேதி அவர்களுக்கான பதவி ஏற்பு விழாவும் 4ஆம் தேதி மேயர் மற்றும் துமை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது.


No comments:

Post a Comment

Post Top Ad