தேய்பிறை அஷ்டமி; 21 அடி உயர காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - புத்தரச்சல் 108 பைரவர் ஆலயத்தில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, 21 அடி உயர மஹா பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - புத்தரச்சல் 108 பைரவர் ஆலயத்தில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, 21 அடி உயர மஹா பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், பல்லடம் - புத்தரிச்சல் 108 பைரவர்கள் சிலை ஆலயத்தில், இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி உயரமுள்ள மஹா பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பால், தயிர், இளநீர், நெய், தேன், எலுமிச்சம்பழம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment