எங்க மீனவர்களை உடனே ரிலீஸ் பண்ணுங்க… அதிரடி காட்டும் முதல்வர் ரங்கசாமி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 2, 2022

எங்க மீனவர்களை உடனே ரிலீஸ் பண்ணுங்க… அதிரடி காட்டும் முதல்வர் ரங்கசாமி!

எங்க மீனவர்களை உடனே ரிலீஸ் பண்ணுங்க… அதிரடி காட்டும் முதல்வர் ரங்கசாமி!



வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, புதுச்சேரி முதல்வர் கடிதம்.
புதுவை மற்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுவை மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.அதன் விபரம் வருமாறு: "கடந்த 31ஆம் இரவு கோடியக்கரை கடற்பகுதியில் 9 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் 3 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 6 மீனவர்கள் தமிழகப் பகுதியையும் சார்ந்தவர்கள். அவர்களது இயந்திரப் படகோடு, இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்

பிடித்துச் செல்லப்பட்ட 9 மீனவர்களையும் விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கருக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad